காதலிக்க பெண் தேவை என கையில் பதாகையுடன் நின்ற வாலிபர்

காதலிக்க தனக்கு பெண் தேவை என திற்பரப்பு அருவியில் வாலிபர் கையில் பதாகையுடன் நின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.;

Update: 2024-05-25 12:09 GMT

காதலிக்க தனக்கு பெண் தேவை என திற்பரப்பு அருவியில் வாலிபர் கையில் பதாகையுடன் நின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் இளைஞர் ஒருவர் காதலிக்க பெண் தேவை என்று எழுதப்பட்ட பேனரோடு திற்பரப்பு அருவியில் நின்று கொண்டு போஸ் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த பேனரில் காதலிக்க பெண் தேவை என ஆங்கிலம் தமிழில் எழுதப்பட்டிருந்தது.திற்பரப்பு அருவியில் தற்போது ஆறு நாட்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ அதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடத்திய விசாரணையில், இந்த வீடியோவில் பேனருடன் காட்சியளிப்பது குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜிஜோ விங்கிளீன்என்ற வாலிபர் என தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

இவர் ஆர்கானிக் ஃபார்ம் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், திருமணத்திற்காக பல இடங்களில் பெண் தேடியும் அவருக்கு மணமகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஒரு பெண்ணிடம் தனது திருமணம் சம்மந்தமாக கூறிய போது, அந்த பெண் உனக்கு பெண் கிடைக்க விட்டால் மணமகள் தேவை என்று உனது தலையில் போர்டு எழுதி வைத்துக்கொண்டு நட என்று கிண்டலாக பேசியதாக தெரிகிறது.இதனால் தான் மணமகள் தேவை என பேனர் எழுதி வைத்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார். வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News