குடும்பப் பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அழகாப்பட்டியில் குடும்பப் பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-05-31 06:18 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அழகாப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி 24 வயதான லோகேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த மூன்று வருடமாக லோகேஸ்வரி முசிறியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜா தனது மனைவி சமாதானப்படுத்தி அழகாப்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகேஸ்வரி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

Similar News