ஆத்தூர் : பைத்தூரில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்க பூமி பூஜை
ஆத்தூர் - மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்காலுடன் கூடிய பாலம் அமைக்க டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 10:45 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி மக்கள் கன்னியம்மன் கோவில் பகுதியில் கழிவுநீர் வாக்காளர் கூடிய பாலம் அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் ஒன்றிய பொது நிதியிலிருந்து மூன்று லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில் சுமார் 7.50 லட் புதூர் கன்னி ஆத்தூர் வட்டார ஆத்ம குழு தலைவர் டாக்டர் செழியன், சேலம் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜவேல் சேலம் கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மஞ்சினி செல்வராஜ், பைத்தூர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி பரமேஸ்வரி வீராசாமி, திரு வேல்முருகன் ஊராட்சி மன்ற தலைவர் புங்கவாடி, கிளைக் கழக செயலாளர்கள் ஜெயபால், ராஜவேல், அன்பழகன் ஒப்பந்ததாரர்,சேட்டு (எ ) செல்லமுத்து, கருணாநிதி, ராஜா (எ) உதயரராகவன் நடேசன் ராயப்பன், ஜெயராமன், துரை மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.