ஆத்தூர் : ஆதார் மையத்தில் சர்வர் பிரச்சினை தொடர்வதால் மக்கள் சிரமம் !
ஆத்தூர் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலக ஆதார் மையம், போஸ்ட் ஆபீஸ் வங்கி உள்ளிட்டவைகளில் சர்வர் பிரச்சனை காரணமாக ஆதரவு பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்
By : King 24x7 Angel
Update: 2024-03-18 09:08 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் வங்கி, போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட இடங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மையங்களில் ஆத்தூர், தலைவாசல் பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தங்களின் ஆதார் புகைப்படம், மொபைல் எண், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம், முகவரி திருத்தம், கைரேகை பதிவு போன்ற பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.தற்போது, ரேஷன் கார்டுகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆதார் கைரேகை புதுப்பித்து வரும்படி தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் ஆதார் மையத்திற்கு அடி அளவில் வருகின்றனர். ஆதார் சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.