ஆத்தூர் : தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை !

ஆத்தூர் பகுதியில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையின் போது திமுக கொடி கட்டி வந்த காரை நிறுத்தி காரில் இருந்த கொடியை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2024-03-29 05:23 GMT

தீவிர சோதனை

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் பணம் அரசியல் கட்சியினர் தருவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் தேர்தல் தேதி அறிவித்த நிமிடத்திலிருந்து தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது மேலும் கட்சித் தலைவர்களின் சிலையை துணியால் மூடி வைத்தும் கட்சி கொடி கம்பங்கள் கட்சிப் பேனர்கள் அனைத்தும் அகற்றினர். அதேபோல் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேர்தல் விதிமுறையை மீறி திமுக கொடி கட்டி வந்த காரை நிறுத்தி தேர்தல் விதிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் இதனால் காரில் இருந்தும் கொடியை அகற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் காரின் உரிமையாளரிடம் தெரிவித்தனர் பின் காரின் உரிமையாளர் தனது காரில் இருந்த திமுக கட்சி கொடியை அகற்றினர்.
Tags:    

Similar News