ஆத்தூர் அரசு பள்ளி ஆசிரியை திடீரென உடல் நலம் குறைவினால் உயிரிழப்பு
ஆத்தூர் அரசு பள்ளி ஆசிரியை திடீரென உடல் நலம் குறைவினால் உயிரிழந்தார்.;
Update: 2024-02-29 07:19 GMT
மணிமேகலை
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியை சேர்ந்த, சுகாதார அலுவலர் செல்வம் மனைவி மணிமேகலை, 49. இவர் ஆத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் முதுகலை ஆசிரியையாக பணி புரிந்தார். நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த பொதுத் தேர்வு பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றார். பின் ஆத்துாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று மணிமேகலைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.