ஆத்தூர்: பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர்: பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-03 05:52 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று தாமதம் இன்றி உடனே வழங்க வேண்டும் 2006 ஆம் ஆண்டு மன உரிமை சட்டப்படி நீண்ட காலமாக அனுபவத்தில் உள்ள மலைவாழ் மக்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்து கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் இருக்கும் மணுக்கள் மீதான விசாரணை செய்து உடனே பட்டா வழங்க வேண்டும். உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வருவாய் கோட்டாட்சியரை தூங்காதே ....., எழுந்து வெளியே வா, மலைவாழ் மக்கள் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் கட்டி போடப்பட்டுள்ள கோப்புகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News