ஆத்தூர் : தேர்தல் பணி அலுவலர்கள் பயிற்சி ௯ட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
ஆத்தூரில் நடந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் அலுவலர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 282 வாக்கு சாவடிகள் உள்ளன இத்தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை அலுவலர்கள் உட்பட 1567 பேர் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷர்வன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற ஷர்வன் குமார் அலுவலர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் (ஸ்ட்ராங் ரூம் ) அறைகள் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தேர்தல் உதவி அலுவலர் பிரியதர்ஷினி வட்டாட்சியர்கள் பாலாஜி மாணிக்கம் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்