கொத்தடிமை முறை ஒழிப்பு தினம்: காவல் ஆணையர் விழிப்புணர்வு

கோவையில் கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசுரங்களை காவல் ஆணையர் வழங்கினார்.

Update: 2024-02-08 15:11 GMT

துண்டு பிரசுரங்கள் விநியோகித்த ஆணையாளர்

கோவை கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்படி நாளை கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறை,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் அங்கிருந்த வடமாநில மக்களிடமும் ஹிந்தி மொழியில் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள்,பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்,

குழந்தைகளின் உரிமைகள்,குழந்தை தத்தெடுத்தல் விவரங்கள்,குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்கள் அடங்கிய பிரசுரங்களை காவல் ஆணையாளர் வழங்கினார்.

Tags:    

Similar News