திருவாரூரில் சமூகவலைதளத்தில் மாற்று மதம் குறித்து அவதூறாக பதிவிட்டவர் கைது
திருவாரூரில் சமூக வலைதளத்தில் மாற்று மதத்தினரை பற்றி தவறாக பதிவிட்டவர் அதிரடி கைது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-21 14:25 GMT
கைதான நபர்
திருவாரூர் அருகே கூத்தாநல்லூர் சரகத்திற்கு உட்பட்ட மேல பனங்காட்டங்குடியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் சிவக்குமார் சமூக வலைதளத்தில் அவரது முகநூல் பக்கத்தில் மாற்று மதத்தினரை பற்றி தவறாக பதிவிட்டு அவதூறான கருத்தை பதிவேற்றம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.
மேலும் பொய்யான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.