போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

ஆரணியில் போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-24 15:12 GMT

போக்சோவில் கைது

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 30). பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடை பெற்று வரும் நிலையில்,கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.முருகன் அணியாலை கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் நேரில் சென்று முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News