டூவீலரில் வேகமாக ஓட்டியதால் விபரீதம் !
டூவீலரில் வேகமாக ஓட்டியதால் விபரீதம். சென்டர் மீடியனில் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். காவல் துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ஆர்.புதுக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முனிராஜ் வயது 26. இவர் பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். வீரராக்கியம், கரூர் வைசியா வங்கி அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக செலுத்தியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முனிராஜுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த முனிராஜின் உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 24 என்பவர்,, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான முனிராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.