விபத்து: இளைஞர் படுகாயம்
பெரிய தாதம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், கரூர்- சின்ன தாராபுரம் ரோட்டில் டூவீலரில் சென்று போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார்.;
Update: 2024-01-01 10:07 GMT
பெரிய தாதம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், கரூர்- சின்ன தாராபுரம் ரோட்டில் டூவீலரில் சென்று போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா, பெரிய தாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கார்த்திக் வயது 27. இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு எட்டேகால் மணியளவில், கரூர்- சின்ன தாராபுரம் சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் விஸ்வநாதபுரி பிரிவு, அக்சரா பேப்ரிக்ஸ் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த அரசு பேருந்து கார்த்திக் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கார்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கார்த்திக்கின் தந்தை மாணிக்கம், இது குறித்து க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக பேருந்தை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.