விபத்தில் படுகாயம்
கரூர் - சேங்கல் சாலையில் டூவீலர் மீது டிராக்டர் மோதியதில், அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, போத்ராவுத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது 23. இவர் தற்போது ஈரோடு மாவட்டம், மரங்காட்டூர், வாழைத்தோட்டம் அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி காலை 11 மணியளவில், கரூர் - சேங்கல் சாலையில் இவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது டூவீலர் முனையனூர், பழனி சிக்கன் ஸ்டால் அருகே சென்று கொண்டிருந்தபோது,, எதிர் திசையில் கரூர் மாவட்டம்,குளித்தலை, கழுகூர், மேல கபேஸ்வரர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் வயது 44 என்பவர் ஓட்டி வந்த டிப்பர் டிராக்டர், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும். ஓட்டியதால், விக்னேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷை உடனடியாக மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டிய குமரவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.