வருவாய் தீர்வாக கணக்கு முடிப்பு
மயிலாடுதுறை வட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியான ஜமாபந்தி நிறைவு நாளில் 25 பயனாளிகளுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது.
. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் சரிபார்த்து, பொதுமக்களிடம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;:- மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களிலும் ஜூன் 12-ஆம் தேதி ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வருவாய் தீர்வாய அலுவலராக செயல்பட்டு, மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் வருவாய் கணக்குகளை சரிபார்த்தார். இறுதிநாளான இன்று மயிலாடுதுறை, கூறைநாடு, செருதியூர், கோடங்குடி, நல்லத்துக்குடி உள்ள 13 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. ஜமாபந்தியின் முடிவில் 25 பேருக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ராகவன், வட்டாட்சியர் விஜயராணி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.