குவிந்த முறைகேடு புகார் - ஆவின் பால் பூத்தில் எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பூத்தில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 05:01 GMT

எம்எல்ஏ  ஆய்வு 

 புதுக்கோட்டை நகர் பகுதியில் 80க்கும் அதிகமான ஆவின் பால் பூத்துகள் உள்ளன. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஒரு சில பால் புத்துகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்படுவதாக, வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முத்துராஜா திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது இன்று எவ்வளவு பால் வந்துள்ளது, எவ்வளவு பால் விற்று உள்ளீர்கள், என்பது குறித்து பால் பூத் முகவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், ஆகவே இதுபோன்று ஒவ்வொரு பால் பூத்தாக ஆய்வு செய்ய உள்ளேன் என்றும், பொதுமக்கள் கூறியது போல முறைகேடு ஏதேனும் நடந்தால், உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கான லைசன்ஸ் கட் செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News