தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-04-11 02:08 GMT

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் நலச்சட்டப்படி தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து இதர நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மற்ற மொழிகளில் பெயர் பலகை வைக்க விரும்பினால் தமிழில் பெரிதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும், இறுதியாக விருப்பமான மொழியிலும் 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான உணவு, கடை மற்றும் இதர நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை. தமிழில் பெயர் பலகை இல்லாத 133 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலதை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் வைக்காவிட்டால் நிறுவனங்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News