பள்ளி வாகனங்களில் தீ விபத்து குறித்த செயல் விளக்கம்

பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2024-05-14 10:45 GMT

தீ விபத்து குறித்து செயல் விளக்கம்

பள்ளி வாகனங்களில் பெரும்பாலும் மாணாக்கர்களை மட்டுமே ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது, பள்ளி வாகனத்தில் தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி? பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் ரீதியான குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?

என்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்று செயல் விளக்கம் செய்து காட்டினர். இதன் மூலம் பள்ளி பேருந்துகளை இயக்கும் போது, இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக தற்காத்துக் கொள்வதற்காகவும், வாகனங்களை தீ விபத்தில் இருந்து மீட்பதற்காகவும் வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News