அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் அபராத தொகை விதிக்கபடுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Update: 2024-05-03 16:38 GMT
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் அபராத தொகை விதிக்கபடுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அலுலவகம் வெளியிட்ட அறிவிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டத்தின் அடிப்படையில் மேற்படி குடியிருப்பு கட்டுமானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி பகுதியில் குடிநீர் விநியோக பணியினை கவனித்து வந்த ஒப்பந்த பணியாளர்களான பிளம்பர் இருவர் மீது காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. எனவே மாநகரப் பகுதிகளில் இதுபோன்று மாநகராட்சி அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் தாமாக முன்வந்து குடிநீர் இணைப்பினை துண்டித்துக் கொள்ளுமாறும், முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் அபராத தொகை விதிக்கபடுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிக்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.