மருத்துவமனையை மீது நடவடிக்கை- சுகாதாரத்துறையிடம் மனு அளித்த நபர்
கோவையில் இயங்கும் பிரபல மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் உள்ள KMCH மருத்துவமனையில் ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர்,நிர்வாகிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அம்மருத்துவமனையை அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவமனையை மூட வேண்டுமென வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்தார்.
இது குறித்து ரகுநாத் கூறுகையில் உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்கொள்ள முடியாது என தெரிவித்தார். இச்சம்பவத்தில் மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வதோடு அந்த மருத்துவமனையை மூட வேண்டும் என்றார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமெத்த தமிழகத்திற்கே தலைகுணிவு எனவும் விமர்சித்தார்.