பொதுக்குளத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் !

குத்தாலம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குளத்தின் அருகே அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தருமாறு மனு மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-02-05 12:55 GMT

 குத்தாலம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குளத்தின் அருகே அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தருமாறு மனு மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கருப்பூர் கிராமம் அந்தோணியார்புரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான குளத்தின் இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்ரமித்து வைத்துள்ளதை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அந்தோணியாபுரத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் அருகிலேயே அரசுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தனி நபர்கள் சிலர் அந்த இடத்தை ஆக்ரமித்து வேலி வைத்து அடைத்து பொதுமக்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைத்துள்ளனர் ‌.

மேலும் பேருந்து மற்றும் வாகனங்கள் அவ்வழியாக செல்வதற்கு இடையூறாக வேலி அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பேருந்துகள் இடம் மாறுவதற்கு வழி இல்லாததால் மயிலாடுதுறையில் இருந்து எஸ்.புதூர் வரை செல்லும் நகர பேருந்து, மற்றும் பள்ளி பேருந்துகள் தங்கள் பகுதிக்கு வருவதில்லை என்று குற்றம்சாட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதியுற்று வருவதால் பொதுகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்ரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் பொதுக்கழிப்பிட வசதி மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் .

Tags:    

Similar News