பொதுமக்களின் பிரச்சனைகள் வரும் 15 நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை
கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பொதுமக்களின் பிரச்சனைகள் வரும் 15 நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
By : King 24x7 Website
Update: 2023-11-01 14:10 GMT
வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஊராட்சி ஒன்றியம் பனமடங்கி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஆகிய பொருட்கள் குறித்து கிராம சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களையும் வாழ்த்தி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சால்வை அணிவித்து கௌரவித்தார். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்குள்ளும், தனிநபர் கோரிக்கைகள் அடுத்த 30 நாட்களுக்குள்ளும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் முறையாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பொதுமக்கள் அனைவரும் நம்முடைய பகுதியில் உள்ள நிலத்தடி நீரை முறையாக கையாள வேண்டும். விவசாயத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்தும் பொழுது நீரை முறையாக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். என்பதற்காக அரசின் சார்பில் சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வீடற்ற பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மேலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறினார், அணைக்கட்டு அருகே வசந்த நடை கிராமத்தில் நடைபெற்ற 'கிராம சபை கூட்டத்தில், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிதி உதவியில் தனியார் பள்ளிக்கு ஈடாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதை, வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் குமர பாண்டியன் பள்ளி ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார்.இதைப்போலவே அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.