திற்பரப்பு அருவியில் முடங்கியுள்ள திட்ட பணிகளை துவக்க நடவடிக்கை

திற்பரப்பு அருவியில் முடங்கி கிடக்கும் சுற்றுலாத்திட்ட பணிகளை மீண்டும் தொடங்க அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-05-11 08:08 GMT

திற்பரப்பு அருவியில் முடங்கி கிடக்கும் சுற்றுலாத்திட்ட பணிகளை மீண்டும் தொடங்க அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான திற்ப ரப்பு அருவியில் சுற்றுலா மேம்பாடு செய்யும் வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கரா ஜின் நடவடிக்கை காரணமாக தமிழக சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு ரூ.4.31 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் அதற்கான பணிகள் ஆகஸ்டு மாதம் தொடங்கின. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக முடங்கிய நிலையில் உள்ளன.

இந்த பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சத்திய மூர்த்தி தலைமையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் மற்றும் திற்பரப்பு தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சத்திய மூர்த்தி கூறுகையில், திற்பரப்பு அருவி பகுதிகளை புனரமைத்து நவீன முறையில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே முடங்கி விட்டன. இந்த பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

பணிகள் தடைபட்டதற்கான காரணங்கள் மற்றும் புதிய வடிவமைப்பில் மேம்பாடு தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்

Tags:    

Similar News