நடிகர் அஜித் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

திருப்பூரில் ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் அஜித் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-01 12:41 GMT

உழைப்பாளர்   தினம் மே 1ம் தேதி  தமிழகத்தில்  தலை சிறந்த நடிகரும்  கோடிக்கணக்கான இதயங்களில்  குடியிருக்கும்  அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்  பிறந்தநாளை முன்னிட்டு  மாவட்டத் தலைவர் வாத்தியார் ரமேஷ் தலைமையில்  திருப்பூர் அரசு மருத்துவமனையில்  500க்கும் மேற்பட்ட  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு  உணவு , பிஸ்கட் , பழங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தலைமை அமைப்பாளர்கள்  ரவீந்திரன் , சசிந்திர பிரபு , கோவிந்தன் , சிறப்பு அழைப்பாளர்கள்  ஜி.கே கார்ஸ் இளங்கோ , சுகுமார் , மற்றும் இளைஞர் அணி நண்பர்கள் கலந்து கொண்டனர் , அதனைத் தொடர்ந்து  கொங்கு  மெயின் ரோடு பில்லா குரூப்ஸ் அஜித் ரசிகர் மன்றம் சார்பாக  தலைவர்  கணேஷ் , செயலாளர்  முருகன் ,  துணைத் தலைவர் முருகன் ,  பொருளாளர் தங்கதுரை  ஆகியோர்  தலைமையில் 50க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.மேலும் சேவூரில்  மோர்பந்தல்  செங்கப்பள்ளி மகிழ்ச்சி கருணை இல்லத்தில் முதியவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News