நடிகர் கமலஹாசன் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் !

நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்வதற்கான இடத்தை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2024-04-02 05:04 GMT

நடிகர் கமலஹாசன்

பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து ஏப்ரல் இரண்டாம் தேதி மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்வதற்கான இடத்தை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் ஏப்ரல் இரண்டாம் தேதி மாலை 5 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசன், பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் அதனை முன்னிட்டு அவர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என். நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் திமுக மாவட்ட கழகபொறுப்பாளர் ஜெகதீசன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News