மத்திய, மாநில அரசுகளை சாடிய நடிகர் மன்சூர் அலிகான்

கீழக்கரையில் நடந்த இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டத்தில், பாஜ., திமுக., அரசுகளை கடுமையாக விமர்சித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.;

Update: 2024-03-04 03:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடிகர் மன்சூர் அலிகானால் துவங்கப்பட்டுள்ள இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தமிழர் திரள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்களும் அவருடைய ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் சிறப்புரை ஆற்றி பேசுகையில், அரசியல் மாற்றம் அடிப்படை மாற்றம் மற்றும் தமிழர்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார்.

Advertisement

அப்போது, தொடர்ந்து இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் என மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

Tags:    

Similar News