அயோத்தி ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற அயோத்தி ராமர் பிரதிஷ்டை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ரஞ்சித் பங்கேற்று ராமரை வணங்கினார்.

Update: 2024-01-23 03:19 GMT

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் பெரிய திரை மூலம்அயோத்தி ராமர் பிரதிஷ்டையை கண்டனர். அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் பிரதிஷ்டை  இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வை நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் பெரிய திரை அமைத்து மக்கள் கண்டு மகிழ்ந்தனர் அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பெரிய எல் இ டி திரை அமைத்து அதில் அயோத்தி ராமர் பிரதிஷ்டை  கண்டனர்.

முன்னதாக வளாகத்தில் அமைக்கப்பட்டுஇருந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜையும் ராமர் பஜனையும் நடைபெற்றது இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்து முன்னணி நிர்வாகிகள் திரைப்பட நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட கலந்து கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த ரஞ்சித் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்.  அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி அதை ஒத்தக்கொள்ள வேண்டும், மின்சாரம் துண்டிப்பு பிரச்சினை எல்லாம் தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இறக்குமதி செய்யப்பட்ட சாமி இல்லை. இது என் தாய் உண்ர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள் தான்.

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன்செய்தியாளரை சந்தித்தார். 500 ஆண்டு காலம் போராடி  வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள், நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. ராமரின் விளையாட்டு துவங்கி உள்ளது இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார் என்று கூறினார்.

Tags:    

Similar News