நெல்லையில் நிவாரணஉதவிகள் வழங்கும் நடிகர் விஜய்

நெல்லை கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.

Update: 2023-12-30 02:53 GMT

நெல்லை கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் வீடுகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்தும்,சேதம் அடைந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து நடிகர் விஜய் கேடிசி நகர் மாதா மாளிகையில் வைத்து இன்று 30/12/23 நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக நெல்லை மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாதா மாளிகைக்கு அழைத்து வந்தனர்.
Tags:    

Similar News