விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-21 03:05 GMT
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வருகிற 26-ந் தேதி முதல் புதிதாக எடை குறைந்த (எல்.எச்.பி.) ரயில் பெட்டி இணைக்கப்படுகிறது. ஏற்கனவே 19 ரயில் பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொருட்களை கொண்டு செல்ல கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.