வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் ஆய்வு
ரூ.41 லட்சத்தில் கிரிவல பக்தர்களின் வசதிக்காக கட்டப்படும் கழிப்பறைகளை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷெரிப் ஆய்வு செய்தார்.
Update: 2024-06-19 06:38 GMT
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கிக்கால், அடி அண்ணாமலை, அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் ஊராட்சிகளுக்கு உள்பட்ட 13 இடங்களில் ரூ.41 லட்சத்தில் கிரிவல பக்தர்களின் வசதிக்காக நவீன கூடுதல் கழிப்பறைகள் கட்டப்பட்டுகின்றன .
இப்பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.