விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி. திடீர் ஆய்வு

Update: 2023-12-01 16:56 GMT


ஏ.டி.ஜி.பி. அருண் ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு ஏ.டி.ஜி.பி. அருண் திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அவர் வழக்கு பதிவேடு, வழக்கு நிலுவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் நிலைய வரவேற்பாளர்களிடம், பொதுமக்கள் வருகையின் போது அவர்களி டம் நடந்து கொள்ளும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். அப்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ் பெக்டர் காத்தமுத்து, நிலைய எழுத்தர் கலைவாணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Tags:    

Similar News