ஆதி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
கெங்கவல்லியில் ஸ்ரீ ஆதி சக்தி மாரியம்மன், மதுரை வீரன் திருக்கோவிலில் வைகாசி திருவிழாவையோட்டி 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடன் செய்தனர்.
Update: 2024-05-26 12:44 GMT
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் ஸ்ரீ ஆதி சக்தி மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் திருக்கோவிலில் சவைகாசி திருவிழா முன்னிட்டு கடந்த 22 ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கி அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அலங்காரமும் பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில், அலகு குத்தும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கம்பி அலகு ,நாக்கு அலகு,தேர் அலகு உள்ளிட்ட பல்வேறு அளவுகளும், 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கினி சட்டி ஏந்தியும்,பூங்கரகம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை சென்று அடைந்தது.
இதில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.