சாஸ்த்ராவில் ‘ஆதிசங்கராச்சாரியார்’ சொற்பொழிவு

சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆதிசங்கராச்சாரியார் குறித்த சொற்பொழிவு நடைபெற்றது

Update: 2024-03-22 07:49 GMT

சொற்பொழிவு நிகழ்ச்சி 

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய மொழிக் குழு சார்பில் ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் என்ற தலைப்பில் தொடர் விரிவுரை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியர் ஆர். மணி திராவிட சாஸ்திரிகள் கலந்து கொண்டு ஆதிசங்கரரின் கொள்கைகள் குறித்த அறிமுகம் என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார்.

இவரைத் தொடர்ந்து சென்னை பிரசிடென்சி கல்லூரி முன்னாள் சம்ஸ்கிருத துறைத் தலைவர் ஆர். தியாகராஜன் பாரதிய மொழிகளில் ஆதிசங்கரரின் கருத்துகளின் பிரதி பலிப்பு என்ற தலைப்பில் பேசினார். பாரதத்தின் ஆன்மிக ஒருங்கிணைப்பை நோக்கிய ஆதிசங்கரரின் அணுகுமுறை என்ற தலைப்பில் முனைவர் ஸ்ரீரமண சர்மா, இந்திய ஒருங்கிணைப்பில் ஆன்மிக ரீதியான ஆதிசங்கரரின் அணுகுமுறை குறித்து பேசினார்.

இவர்களுக்கு கலை அறிவியல் மானுடவியல் மற்றும் கல்வி யியல் புல முதன்மையர் கி. உமாமகேஸ்வரி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக, சம்ஸ்கிருத துறைத் தலைவர் வேணுகோபாலன் வரவேற்றார்.நிறைவாக, சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார். முனைவர் பத்ரிநாத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News