மாணவர் சேர்க்கை தொடக்க விழா
பழனி ரோட்டில் காமாட்சிபுரம் பிரிவில் அமிர்தா கல்விக் குழுமத்தின் 21-வது பள்ளியானது புதிதாக அமைந்துள்ளது. இங்கு நேற்று மாணவர் சேர்க்கை துவக்க விழா நடைபெற்றது. இதனை மூத்தத் துறவி சுவாமி இராமகிருஷ்ணானந்தபுரி தலைமை வகித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 05:48 GMT
மாணவர் சேர்க்கை தொடக்க விழா
அமிர்தா கல்விக் குழுமத்தின் 21-வது பள்ளியானது திண்டுக்கல் - பழனி ரோட்டில் காமாட்சிபுரம் பிரிவில் புதிதாக அமைந்துள்ளது. இங்கு நேற்று மாணவர் சேர்க்கை துவக்க விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாதா அமிர்தானந்தமயி மடத்தின் மூத்தத் துறவி சுவாமி இராமகிருஷ்ணானந்தபுரி தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி அமிர்த வித்யாலயம் பள்ளிகளின் தாளாளர் பக்திப்ரியாமிர்தபிராணா, கல்வி அலுவலர் முரளிதரன் பங்கேற்றனர்.