பத்மா நரசிம்மன் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

மஞ்சக்குடி பத்மா நரசிம்மன் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.;

Update: 2024-06-17 02:15 GMT
பத்மா நரசிம்மன் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

பைல் படம் 

  • whatsapp icon

 கும்பகோணம் அருகே உள்ள திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி பத்மா நரசிம்மன் தொழில் பயிற்சி நிலையம். 2012இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் இதுவரை 2000 மாணவர்களுக்கு மேல் படித்து முடித்து விட்டு முன்னணி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி பயன் அடைந்துள்ளனர். இந்நிறுவனத்தின் நோக்கம் உயர் கல்வியில் நாட்டம் இல்லாதவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அதோடு  வேலைவாய்ப்பும் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம். ஸ்கில் இந்தியா, இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட NCVT படிப்புகளை வழங்குகிறது. TTK பிரெஸ்டிஜ்-ன் நிதி உதவியுடன் பத்மஸ்ரீ சாந்தி ரங்கநாதன்  நேரடி பார்வையில் இந்நிறுவனம் நடைபெறுகிறது.

இந்த நிறுவனத்தில் 12 டிரேட்கள் உள்ளன. சில டிரேட்கள் ஒரு வருடம் மற்றும் சில இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகின்றன.  50% மாணவர்களுக்கு இலவச  தொழில் கல்வி அளிக்கப்படுகிறது. மீதி உள்ள 50% மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ 5000/-  கட்டணமாக செலுத்தினால் மட்டுமே போதும். திருவாரூரிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கும் ஒரே தொழில் பயிற்சி நிறுவனம் இதுவே 8அம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு வெல்டர், பிளம்பர் மற்றும் வயர்மன் போன்ற தொழில் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 10அம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு இரண்டு வருட பயிற்சியாக பிட்டர், எலெக்ட்ரிசியன், சிவில் டிராப்ஸ்மேன், ஏசி மெக்கானிக், பவர் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பயிற்சியும், 1வருட பயிற்சியாக டீசல் மெக்கானிக், டூ வீலர் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்ட்வர் பயிற்சியும் கற்றுத்தரப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் பொறியியல் படிப்பு முடித்த  பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை கணினிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும், அனைத்துத் தேர்வுகளும்  கணினி மூலமாகவே நடைபெறுகின்றன. மேலும் சிவில் டிராப்ஸ்மேன் மாணவர்களுக்கு AUTOCADD கற்பிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா நடைபெறும் ஒரே மையம் இந்த மையம் மட்டுமே. (2024 2025) இந்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிபெறலாம்

Tags:    

Similar News