மலைக்கோட்டை அருகே அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
திருச்சி மலைக்கோட்டை அருகே அதிமுக வேட்பாளர் கருப்பையா திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.;
தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தால் திருச்சி மாவட்டம் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர் கருப்பையா, திருச்சி, புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த வேட்பாளர் கருப்பையா, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, மலைக்கோட்டை வாயிலில், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், இப்ராம்ஷா, அரவிந்தன் உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சின்னகடைவீதி, பாபு ரோடு, சௌக், என்.எஸ்.பி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.