வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்!
ஆரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வி. கஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
Update: 2024-03-25 15:29 GMT
வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஆரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வி. கஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் எம்எல்ஏ,திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே. மோகன், முன்னாள் அமைச்சர் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.