மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அதிமுக வேட்பாளர் சுவாமி தரிசனம் !
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் சாமி தரிசனம் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 11:04 GMT
அதிமுக வேட்பாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் அவர்களின் நினைவிடத்தில் சென்று ஆசி பெற்று சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டி நெய் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார்.இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் அவர்களை அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் சந்தித்து சால்வை இணைத்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை மனோகர், மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை சரவணன், மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.