உணவகங்களில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ சேகர்

பரமத்தி வேலூரில் உணவகங்களில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ சேகர்

Update: 2024-04-17 01:56 GMT
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று பரமத்தி வேலூரில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.எ சேகர் தலைமையில் நகர செயலாளர் பொன்னி வேலுசாமி மற்றும் கூட்டனி கட்சியினர் நாமக்கல் பாராளுமன்ற வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக கட்சி காரியாலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வேலூர் பழைய பைபாஸ் சாலை,நான்கு சாலை,அஹ்ராகரம்,அனிச்சம்பாளையம்,கடை வீதி மற்றும் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் காரியாலயம் வந்தடைந்தது. பின்னர் மோகனூர் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது உணவகம் ஒன்றில் சோசை சுட்டும்,மீன் கடையில் மீன் பொறித்தும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் அ.தி.மு.க வினர் மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News