திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-02 05:30 GMT

போராட்டம் 

அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அரசு கொறடா தாமரை. இராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பணிப்பெண்ணை தாக்கிய பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோஷமிடபட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News