அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சார்பில் திருப்பூரில் ஆளும் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 13:46 GMT

கண்டன ஆர்ப்பாட்டம் 

திருப்பூர் மாவட்டம், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அனி சார்பில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தமிழகத்தை போதை பொருளாக மாற்றிய தமிழக அரசை கண்டித்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்து.

இதில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை.கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் கனக அமைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரன், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, கரைப்புதூர் நடராஜன், பரமசிவம், என் எஸ் நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக பங்கேற்று விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசுகையில், தமிழகத்தின் வருங்கால விடிவெள்ளி நாளைய முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆவார், இந்தியாவின் பிரதமர் யார் என்று தீர்மானிக்கக் கூடிய சக்தியாக எடப்பாடியார் திகழ்வார், மாநகராட்சி அலுவலகம் முன்பு பூட்டப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஏனென்றால் இதன் பிறகாவது மாநகராட்சி திருந்த வேண்டும், பொது மக்களை வஞ்சிக்க கூடாது, 50 சதவீதம் ஒப்பந்தத்தில் கான்ட்ராக்ட் கேட்பதால், யாரும் பணி செய்ய முன்வரவில்லை, திருப்பூர் மாநகராட்சியில் வாழும் மக்களுக்கு குடிநீர் ஒழுங்காக கிடைக்கப்பெறவில்லை, பாதுகாப்பான வைத்தியம் கிடைப்பதில்லை, குப்பையும் அள்ளப்படுவதில்லை, இதை கண்டிக்கும் விதமாகத்தான் மாநகராட்சி எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பிறகு மாநகராட்சி திருந்த வேண்டும் இல்லாவிட்டால் திருத்தப்பட வைக்கப்படும், தமிழகத்தில் இன்று பிரதான கைத்தொழிலாக இருப்பது கஞ்சா, பொக்கேன், ஹெராயின் போன்ற போதை பொருள் விற்பனையாகும், எங்கு சென்றாலும் சுலபமாக வாங்கி வடலாம் , டெல்லியில் தமிழகத்தின் மானத்தை திமுக சூறயாடி உள்ளது, இதற்கு முன்பு 2ஜி வழக்கில் கனிமொழி மற்றும் மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டு திகார் சிறயில் கருணாநிதி சென்று பார்த்து வந்துள்ளார்.

இன்று போதைப்பொருள் வழக்கில் திமுக பொறுப்பாளர் ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமதிப்பு, இதனால் தமிழகத்தில் அனைவரும் தலை குனிந்து நிற்கிறோம், போதை பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகுக்கிறது.

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழர்கள், குற்றவாளி முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஜாபர் சாதி திமுகவின் உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர் என்று மதிய போதை ஒழிப்பு புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை தேடுகிறது என்று தெரிந்தவுடன் ஒரே இரவில் ஜாபர் சாதிக்கு கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர், ஆனால் பதவி கொடுப்பதற்கு முன்பு ஸ்டாலினுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார்? திருப்பூரில் எந்த பெட்டிக்கடையிலாவது குட்கா பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு கொடுக்கலாம், 1970 இல் தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார், எனவே பொதுமக்கள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அபார வெற்றி பெறச் செய்ய வேண்டும், அதற்கு முன்னோட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் திகழ்கிறது என்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் பல்வேறு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நான்காவது குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது, அனைத்து திட்டங்களுக்கும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, கொரோனா காலகட்டத்தால் பணிகள் தாமதமானது அதன் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்று நாம் கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் அவர்களது தந்தை பெயரை வைத்தது மட்டும்தான் அவர்கள் சாதனையாக இருந்தது, இதைத் தவிர வேறு எந்த திட்டங்களும் பொதுமக்களுக்கு கொண்டு வரவில்லை, தமிழகம் முதல்வருக்கு தெரிந்த போதை விற்பனை நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதேபோன்று முதல்வரின் மகன் அனைத்து சினிமா விழாக்களிலும் பங்கே இருக்கிறார் இது மட்டும்தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்த ஒரே ஒப்பற்ற முதல்வர் நமது புரட்சி தலைவி அம்மா அவர்கள், தற்பொழுது திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளது, எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை அரங்கேறி வருகிறது.

எனவே திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று தர வேண்டும் என்று பேசினார்.

Tags:    

Similar News