அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம்

முண்டியம்பாக்கத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.;

Update: 2023-12-16 06:04 GMT
 முண்டியம்பாக்கத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண் டித்து விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் முண்டியம்பாக்கத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் லட்சுமிநாராயணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுமதி நாகப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் கும ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணை செயலாளர் ரேணுகா ராஜவேல் வரவேற்றார்.

Advertisement

தலைமை கழக பேச்சாளர் மதுரை கிருபாகரன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் சீர்கேடு குறித்து கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நரசிம்மன், ஒன்றிய பேரவை செயலாளர் ஜோதிராஜா, பேரவை துணைத் தலைவர்கள் குமாரராஜா, சிவசங்கர், மகளிர் அணி சிவகாமி லட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாங்கம், கண்ணப்பன், ஓம் சக்தி, குமார், கணபதி, கருணாமூர்த்தி, சுரேஷ், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News