அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2024-06-25 06:42 GMT

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் மத்திய ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி - அலமேலு தம்பதி மகன் கதிர், சங்கராபுரம் அடுத்த புதுப்பேட்டை விஜயன் மகள் இந்துமதி ஆகியோருக்கு கடந்த 17ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. தொடர்ந்து, வரவேற்பு விழா மாடூரில் நடந்தது. விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு. ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், பழனி, சந்தோஷ், சேகர், இளந்தேவன், ராஜசேகர், தேவேந்திரன், மணலுார்பேட்டை நகர செயலாளர்கள் பாபு, ரமேஷ், நிர்வாகி கதிர் செல்லப்பன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News