திருச்சியில் திமுக வாக்கு எண்ணும் முகவா்களுக்கான ஆலோசனை

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வாக்கு எண்ணும் முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

Update: 2024-06-02 01:26 GMT

ஆலோசனை கூட்டம்

 மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக மாவட்டச் செயலா்கள், வேட்பாளா்கள், தலைமை முகவா்கள் பங்கேற்கும் கலந்தாலோசனை கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களின் முகவா்களும் பங்கேற்றனா்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திலிருந்து சட்டத்துறை செயலரும், மூத்த வழக்குரைஞருமான என்.ஆா்.இளங்கோவன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, செய்தித் தொடா்பு செயலாளா் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோா் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று ஆலோசனை வழங்கினா். திருச்சியில் பங்கேற்ற நபா்களுக்குஅமைச்சா் கே.என். நேரு நேரில் ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில் பெரம்பலூா் தொகுதி வேட்பாளா் கே. என். அருண் நேரு, மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, கரூா் மாவட்ட அவைத் தலைவா் டி. ராஜேந்திரன், குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ,முன்னாள் எம்எல்ஏ ராமா், மாநகராட்சி மேயா் அன்பழகன், வழக்குரைஞா்கள் ஓம் பிரகாஷ், பாஸ்கா், பெரம்பலூா் மாவட்டச் செயலா் ஜெகதீசன், மதிமுக மாநில துணைச் செயலா் தி மு ராஜேந்திரன், மதிமுக துணை பொதுச் செயலா் ரொகையா, மதிமுக மாநகா் மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலா் மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News