வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
சங்ககிரியில் வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்;
Update: 2024-02-20 16:15 GMT
ஆலோசனைக் கூட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரி மக்களவை தேர்தலில் பணியாற்ற உள்ள மண்ட அலுவலர்கள், உதவி மண்ட அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய 28 மண்டல அலுவலர்கள், 28 உதவி மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல, உதவி மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, தனி வட்டாட்சியர் ஜெயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன், சங்ககிரி வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.