கரூரில் மலிவு விலையில் மளிகை பொருட்கள்:அள்ளிச் சென்ற பொதுமக்கள்

கரூரில் மலிவு விலையில் மளிகை பொருட்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.

Update: 2024-03-15 16:27 GMT

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

 மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு, இந்திய அரசாங்கத்திடமிருந்து, பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில், சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர்.

இந்த விற்பனையின் போது கோதுமை ஒரு கிலோ 27 ரூபாய் 50 காசுக்கும், அரிசி ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், கடலைப்பருப்பு ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றதால், பொதுமக்கள் வெளி சந்தையில் விற்கும் விலையை விட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்வதை அறிந்து, பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

மேலும், அவரவர் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு, கிலோ கணக்கில் அத்தியாவசிய பொருட்களை அள்ளிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News