29 ஆண்டுகளுக்குப் பிறகு... கண்மாய்க்கு பூஜை

தேனி அருகே மறுகால் பாய்ந்த கண்மாய் கரையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர்.;

Update: 2023-12-21 11:17 GMT

தேனி அருகே மறுகால் பாய்ந்த கண்மாய் கரையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர். 

தேனி அருகே மறுகால் பாய்ந்த கண்மாய் கரையில் விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர். தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் சிகு ஓடை கண்மாய் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாயின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக, சிகு ஓடை கண்மாய் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்தது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு சிகு ஓடை கண்மாய் மறுகால் பாய்ந்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று சிகு ஓடை கண்மாய் கரையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கண்மாய் நீரில் பூத்தூவி வரவேற்றனர். பின்னர், அன்னதானமும் நடைபெற்றது .இந்த நிகழ்வில், சிகு ஓடை கண்மாய் நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.பிரகாஷ், செயலாளர் பழனிசிக்கு, பொருளாளர் சரவணன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News