திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் - கனிமொழி எம்பி வேலூரில் பேட்டி.
திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி வேலூரில் பேட்டியளித்துள்ளார்.
Update: 2024-02-23 09:09 GMT
திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக மாநிலங்களவை உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி தெரிவித்தார். வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வேலூரில் இன்று மாநிலங்களவை உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி தலைமையிலான திமுக குழுவினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது . பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும் திமுக அதிகமாக தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளதாக ப கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? இந்தியாவில் எல்லா கட்சிகளும் 50% கூட தேர்தல் பத்திரம் வாங்வில்லை . பாஜகவில் தான் அதிக அளவில் பத்திரம் வாங்கியுள்ளார்கள். அவர்கள் யாரும் குற்றம் சொல்ல முடியாது. தன்னுடைய கட்சி பணத்தை கொண்டு வருவதற்காக பிஜேபி தவறான சட்ட வடிவம் கொண்டு வந்துள்ளது . அதை தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து உள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? அவர் 10 வருடமாக ஆட்சி நடத்தி தமிழகத்தில் பின்னோக்கி நகரக்கூடிய நிலையில் அதிமுக வைத்துவிட்டு சென்றது. இன்றைக்கு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர் வேலை வாய்ப்பு உருவாக்குதல் அனைத்தும் திமுக ஆட்சியில் சாத்தியமாக்கப்பட்டுள்ளதுதேர்தல் அறிக்கை விமர்சிக்கிற அளவுக்கு அதிமுகவுக்கு தகுதியில்லை . பாஜகவுக்கு யார் எதிராக பேசினாலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது இன்றைய மத்திய அரசாங்கத்தின் தொடர் நிலையாகும். விவசாயிகளின் போராட்டத்தை இந்த மத்திய அரசு குற்ற சம்பவங்களை போல நடத்தி வருகிறது . கண்ணீர் புகை குண்டு , கம்பிகளை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகள் ஞாயத்துக்காக போராடி வருகிறார்கள் . ஆனால் பாஜக அரசு அதைக் கேட்க மனதில்லை அவர்களை எதிர்த்து ஊடகங்கள் குரல் எழுப்பினாலும் அவர்களை கூட நசுக்குகிறது. செய்யார் அருகில் சிப்காட் வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு ? இது குறித்து நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன். மேலும் விவசாயிகளை சந்தித்து விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.