10ரூபாய் செலுத்தினால் பையும் வரவில்லை, பணமும் வரவில்லை

திண்டுக்கலில் மாசுக்கட்டுப்பாடு துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சள் பை தானியங்கி இயந்திரத்தில் பை வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினார்.

Update: 2024-04-21 14:28 GMT

இயங்காமல் போன மஞ்சள் பை இயந்திரம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மாசுக்கட்டுப்பாடு துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டு 10- ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சள் பை வருமாறு வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது அணைத்து இடங்களில் இன்று இந்த இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதில் 10- ரூபாய் செலுத்தினால் பையும், பணமும் வராமல் மக்கள் ஏமாற்றம்.

Tags:    

Similar News