வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை
காவல் துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி அளிக்கப்படுகிறது. செல்போன், ஐ-பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை முகவர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நுழைவாயில் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.